அஜித் விட்டாலும், அரசியல் அஜித்தை விடுவதாய் இல்லை..?

Last Updated: வெள்ளி, 15 மார்ச் 2019 (19:56 IST)
தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு நேர்கொண்ட பார்வை என பெயரிட்டுள்ளனர்.  
 
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் அஜித் வழக்கறிஞராக நடிக்கிறார். 
 
வினோத் இயக்கம் என்றதும் தீரன் அதிகாரம் ஒன்று மாதிரி படம் எடுப்பீர்கள் என்று பார்த்தால் இப்படி ரீமேக் படத்தில் அஜித்தை நடிக்க வெச்சிட்டீங்களே என்பது ரசிகர்களின் ஆதங்கம். 
 
ரசிகர்களின் ஆதங்கத்தை போக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அடுத்து அஜித்தை வைத்து அரசியல் படம் ஒன்றை எடுக்கப் போகிறாராம் வினோத். அந்த படத்தில் அஜித் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. 
 
இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும். அஜித் அரசியலை விரும்பும் நபர் இல்லை. மேலும், தனது படங்களில் கூட அரசியல் நுழைவதை விரும்ப மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :