திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : சனி, 7 மே 2022 (22:02 IST)

35 ஆண்டுகளுக்கு பின் தமிழில் வசனமில்லாமல் ஒரு திரைப்படம்!

gandhi talks
35 ஆண்டுகளுக்கு பின் தமிழில் வசனமில்லாமல் ஒரு திரைப்படம்!
கடந்த 1987ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான பேசும்படம் என்ற திரைப்படம் முழுக்க முழுக்க வசனமே இல்லாத படமாக இருந்தது
 
இந்த நிலையில் 35 ஆண்டுகள் கழித்து வசனம் இல்லாத ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. விஜய் சேதுபதி அரவிந்த்சாமி அதிரடி நடிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார்
 
காந்தி டாக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் தற்கால சமுதாய நிலைமைகளை காமெடியுடன் அலசும் ஒரு படமாக இருக்கும் என்றும் இந்த படம் பொழுதுபோக்கு அம்சத்துடன் சமூக கருத்துள்ள படம் என்றும் கூறப்படுகிறது
 
35 ஆண்டுகளுக்கு பிறகு வசனமே இல்லாமல் உருவாக்கப்படும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி அரவிந்த்சாமி ஆகிய இருவரும் மீண்டும் இணைய உள்ளது கோலிவுட்டு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது