ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 28 மே 2024 (07:29 IST)

நமீதா தன் கணவரை விவாகரத்து செய்கிறாரா?... இணையத்தில் தீயாகப் பரவிய வதந்தி!

2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களால் பேசப்படும் நடிகையாக வலம் வந்தார். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப்படங்களில் நடித்து மார்க்கெட்டைப் பிடித்த நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

இப்படி தமிழக மச்சான்ஸ்களின் மனதில் கூடுகட்டி வாழ்ந்த நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பட்டிதொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

அரசியலிலும் கால்பதித்த அவர் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களக நமீதா அவருடைய கணவர் வீரேந்திர சவுத்ரியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை நமீதா மறுத்துள்ளார். அந்த செய்தியைப் பார்த்து கணவரோடு சிரித்து மகிழ்ந்ததாக அவர் கூறியுள்ளார்.