படு மாடர்னாக மாறிய அருவி பட நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

Last Updated: வெள்ளி, 3 மே 2019 (16:28 IST)
அருவிப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த நடிகை அதிதி பாலனுக்கு அந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்து விருதுகளை குவிக்கச்செய்தது. 


 
அப்படத்தில் சமூக பிரச்சனைகளை எதிர்க்கும் ஒரு புரட்சி பெண்ணாக நடித்திருந்த அதிதி பாலனின் நடிப்பு பலரையும் திரும்பி பார்க்கவைத்தது, சாதாரண தோற்றத்தில் தன் யதார்த்தமான நடிப்பால் பலரையும் கவர்ந்த இவர் தற்போது படு மாடர்னாக மாறி வருகிறார். 


 
மேலும் அருவி படத்தில் நடித்தபோது படு ஒல்லியாக இருந்த அவர் தற்போது கொஞ்சம் உடல் எடை கூடி மாடர்னாக புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதனை கண்ட ரசிகர்கள் இந்த கெட்டப்பில் பார்ப்பதற்கு நீங்கள் வயதான பெண் போன்று இருக்கிறீர் என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர். இதில் மேலும் படிக்கவும் :