திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 6 செப்டம்பர் 2018 (17:25 IST)

விஜயின் செயலால் சிலிர்த்த நடிகை!

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் சர்க்கார் படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
 
சங்கராபரணம் படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து பிரபலமான துளசி, இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார்.

 
முன்னதாக பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இத்தனை வருட அனுபவத்தில் விஜய்யுடன் நான் இப்போது தான் நடித்திருக்கிறேன் என்று கூறிய துளசி, விஜய் தன்னை தன் சொந்த அம்மா போலவே கவனித்துக்கொண்டார், என் மகன் பற்றி கேட்டு தெரிந்துகொள்வார். சினிமாவை நிறைய கற்றுக்கொள்ள சொல்லுங்கள். யாரிடமாவது உதவி இயக்குனராக பணியாற்ற சொல்லுங்கள் என கூறினார். 

 
அம்மா என்று ஸ்பாட்டில் எப்போதும் கூப்பிட்ட விஜய்யிடம் பணியாற்றியது மகிழ்ச்சி என துளசி கூறியுள்ளார்.