திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (19:28 IST)

படபிடிப்பில் நடிகர் நாசருக்கு காயம்; மருத்துவமனையில் அனுமதி

nassar
பிரபல குணச்சித்திர நடிகர் நாசருக்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 நடிகர் நாசர் நடித்த படம் ஒன்றின் படப்பிடிப்பு தெலுங்கானா போலீஸ் அகாடமியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் அவர் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென காயம் ஏற்பட்டது
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் நாசருக்கு லேசான காயம்தான் என்றும் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என்றும் இன்னும் ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
நடிகர்  நாசருக்கு காயம் என்ற தகவல் திரை உலகில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது