அபூர்வ ராகங்கள்' ரிலீசின்போது இருந்த மனநிலையில் இருக்கின்றேன்: ரஜினிகாந்த்

Last Modified திங்கள், 26 நவம்பர் 2018 (22:14 IST)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975ஆம் ஆண்டு வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தில் ஒரு சிறு கேரக்டரில் அறிமுகமானார். அதன்பின்னர் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்த அவர் 'பைரவி' படத்தின் நாயகனாக மாறி அதன்பின் ஒருசில ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ஆனார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஷங்கர், அக்சயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், தனது முதல் படமான அபூர்வ ராகங்கள்' திரைப்படம் வெளியாகும்போது என்ன மனநிலையில் அதாவது டென்ஷனுடன் கூடிய மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் 44 வருடங்கள் கழித்து தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படம் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :