மூன்று முகம் ரீமேக்.... ரஜினி வேடத்தில் அஜீத்?

Geetha priya| Last Modified திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (12:11 IST)
ரஜினியின் ஸ்டார் வேல்யூவை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய படம் மூன்று முகம். போலீஸ் அதிகாரியாக ரஜினி காட்டிய முறுக்கும், விரைப்பும் கஞ்சி போட்ட காக்கி கதாபாத்திரத்துக்கு ஆப்டாக பொருந்தியது. இன்றும் காக்கி வேடம் என்றால் தங்கப்பதக்கத்துடன் மூன்று முகம்தான் யார் நினைவிலும் வரும். 
இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை சத்யா மூவிஸிடமிருந்து வாங்கியுள்ளார் கதிரேசன். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா படங்களை தயாரித்த அதே க்ரூப் கம்பெனி கதிரேசன்தான்.
 
இந்த ரீமேக்கை இயக்கப் போவது யார் என்றோ நடிக்கப் போவது இவர் என்றோ இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. விஜய், அஜீத், கார்த்தி யார் நடித்தாலும் நன்றாக இருக்கும் என மூன்று சாய்ஸ்கள் சொல்லியிருக்கிறார் கதிரேசன்.
Ajith

ரஜினியின் மூன்று முகம் படத்தின் மீது விஜய்யைப் போலவே அஜீத்துக்கும் ஒரு கண். இப்போதிருக்கும் நிலையில் அஜீத் நடித்தால் அவரது ஸ்டார் பவருக்கு படம் பிய்ச்சுக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும், விருப்பமும்.
 
இன்னும் சில தினங்களில் ரஜினியின் காக்கி உடையை யார் மாட்டப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :