அஜீத் படத்தில் பிரம்மானந்தம்...?

அஜீத் படத்தில் பிரம்மானந்தம்...?
Geetha Priya| Last Updated: திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (13:25 IST)
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் தெலுங்கின் முன்னணி காமெடி நடிகர் பிரம்மானந்தம் நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அனுஷ்கா, த்ரிஷா, தேவி அஜீத் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சென்ற வாரம் சில காட்சிகள் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டன. அஜீத் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 
 
படப்பிடிப்பு தளத்தில் பிரம்மானந்தமும் காணப்பட்டார். அதனால் அவரும் படத்தில் நடிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பிரம்மானந்தம் ஆந்திராவின் கவுண்டமணி. அவர் இருந்தால் ரசிகர்களை திரையரங்குக்கு எளிதாக ஈர்க்கலாம். அதன் காரணமாகவே அஞ்சான் படத்திலும் அவரை நடிக்க வைத்தனர். இப்போது அஜீத் படத்தில்.
 
அவர் கடைசியாக பிரகாஷ்ராஜின் டோனி படத்தில் நடித்திருந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :