ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுவை மிகுந்த பாசிபயிறு லட்டு செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
பாசிப் பயிறு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 200 கிராம்
ஏலக்காய் - 6
முந்திரி - 50 கிராம் (உடைத்தது)
செய்முறை:
 
பாசிப் பயிறை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவேண்டும். வாசனை வரும்வரை வறுத்தால் போதுமானது. வறுத்த பயிறை மிக்சியில் அரைக்கவும் அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும். அதேபோல் சர்க்கரையை மிக்சியில் அரைத்து  கலக்கவும். இதோடு மூன்று ஏலக்காய் சேர்க்கவும்.
 
ஏலாக்காயை லேசாக நெய்யில் வறுத்து தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும், எல்லாவற்றையும் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
 
வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடானவுடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அந்த மாவை கலந்து வெதுவெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆறியதும், பின்னர் பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளலாம்.  சுவை மிகுந்த பாசிபயிறு லட்டு தயார்.