உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆப்பிள் மில்க்‌ஷேக் செய்ய...!

ஆப்பிளை அதிகம் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. சுவையான ஆப்பிள் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
தேவையான பொருட்கள்:
 
ஆப்பிள் - 1
பால் - 1 டம்ளர்
பேரீச்சம் பழம் - 6
தேன் அல்லது சர்க்கரை - 1 டீஸ்பூன் 
செய்முறை:
 
பாலை நன்றாக தண்னீர் சேர்க்காமல் காய்ச்சவும். ஆப்பிளை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பேரீச்சம் பழத்தை சிறிது நீரில் கழுவி, அதன் தொல் மற்றும் கொட்டையை நீக்கி வைக்கவும். இதை பாலில் நன்றாக ஊறவைக்கவும்.
ஆப்பிள் துண்டை பேரீச்சம் பழம் சேர்த்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் ஆரோக்கியமான ஆப்பிள் ஆப்பிள் மில்க்‌ஷேக் தயார். தேவைப்பட்டால், இதில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்தும் பரிமாறலாம்.


இதில் மேலும் படிக்கவும் :