வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

தீபாவளிக்கு சுவை மிகுந்த குலாப் ஜாமுன் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
பால் - தேவையான அளவு
சர்க்கரை - 2 கப்
பால் பவுடர் - 1 கப்
மைதா - 1/2 கப்
சமையல் சோடா - 1/2 தேக்கரண்டி
உருக்கிய வெண்ணெய் - 2  மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு ஏற்ப
ஏலக்காய் - 2
தண்ணீர் - 1 கப்
 
செய்முறை:
 
முதலில் சர்க்கரை பாகினை தயார் செய்யவும். மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும்  வரை சூடு செய்யவும். நல்ல திக்கான பதத்தில் இருக்க வேண்டும்.
ஜாமுன் செய்ய:
 
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சமையல் சோடா, வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். இதில் தேவையான அளவு  பால் ஊற்றி லூசாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த உருண்டையை சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
 
பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடு  செய்யவும். எண்ணெய் சூடானதும் அதில் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.  குலாப் ஜாமுன் மெதுவாக அடியிலிருந்து மேலே வர வேண்டும்.
 
பொன்னிறமானதும் மெதுவாக வெளியே எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும். குலாப் ஜாமுனை 30 நிமிடங்கள்  சர்க்கரைப் பாகிலையே விட்டு விடவும். பிறகு எடுத்து பரிமாறலாம். சுவையான குலாப் ஜாமுன் தயார்.
 
குறிப்பு:
 
* குலோப் ஜாமுன் செய்யும்போது ஜாமுன் உருண்டை பிளவு இல்லாமல் உருட்டவும். உருண்டை பிடிக்கும் பொழுது கையில் கொஞ்சம் நெய் தடவி உருட்டினால் நன்றாக இருக்கும்.

* சிறு சிறு உருண்டைகளைக செய்து வைக்கவும். சர்க்கரை பாகில் ஊறிய பின்பு அளவு பெரியதாகும். 
 
* குலோப் ஜாமுன் செய்யும்போது சர்க்கரை பாகில் ஏலக்காய் பொடி அல்லது ஏலக்காய் தூள், குங்கும பூ சேர்த்தால் நல்ல மனமாக இருக்கும்..