சிம்பு எங்களின் நெருங்கிய நண்பர் - செல்வராகவன், யுவன் பேட்டி


bala| Last Updated: செவ்வாய், 6 டிசம்பர் 2016 (14:56 IST)
யுவன், செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. செல்வராகவனின் வரவிருக்கும் படங்களுக்கு யுவன் இசையமைக்கிறார். ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு இவர்கள் இருவரும் இணைந்து பதிலளித்தனர்.

 

உங்கள் அடுத்தப் படம் சந்தானத்துடன். நீங்கள் ஒரு ஜானரில் மட்டும் படமெடுப்பவர் கிடையாது என்றாலும், உங்களிடம் காமெடியை எதிர்பார்க்க முடியாதே...?

செல்வராகவன் - கரெக்டா புடிச்சிட்டீங்க. கண்டிப்பா அது கம்ப்ளீட் காமெடிப் படம் கிடையாது. ரொம்ப எக்சைட்டடா இருக்கும். 8 வருடங்களுக்குப் பிறகு நாங்க (செல்வராகவன் - யுவன்) இணைஞ்சிருக்கிறோம். இது ரொமான்டிக் ஃபிலிம்.

யுவன் - யா... ரொமான்டிக் ஃபிலிம். 7 ஜி ரெயின்போ காலனி ஜானர்ல, இன்னைக்கு யங்ஸ்டர்ஸுக்கு எப்படி இருக்குமோ அதை ட்ரை பண்ணப் போறோம்.

நெஞ்சம் மறப்பதில்லை மியூசிக் எப்படி இருக்கும்?

யுவன் - நீங்க போய் படத்தைப் பார்த்து மியூசிக்கை படத்தோட அனுபவிக்கணும். நெஞ்சம் மறப்பதில்லை சவுண்ட் ட்ராக் எனக்கும், செல்வாவுக்கும் ரொம்ப நாள் ட்ரீம். இந்தப் படத்துல அது நிறைவேறியிருக்கு.

கான் படம்...?

செல்வராகவன் - கான் பத்தி நிறைய பேர் கேட்கிறீங்க. அதுக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைக்கிறேன். அதுல எந்த பிராப்ளமும் கிடையாது. ஆக்சுவலி சிம்பு எனக்கும், யுவனுக்கும் நெருங்கிய நண்பர். நடக்கும்... நடக்கும்னு நினைக்கிறோம். நடக்கும் போது கண்டிப்பா வேற மாதிரி இருக்கும்.

AAA படத்தில் என்ன மாதிரி இசையை எதிர்பார்க்கலாம்?

யுவன் - ட்ரிபிள் ஏ படத்துக்கு ஒரு சிங்கிள் இப்போ வொர்க் பண்ணிட்டு இருக்கோம். ரியலி எக்சைட்டட். நீங்க எல்லாம் அதை கேட்கணும். வித்தியாசம்னு சொல்ல முடியாது... ஃபன் சாங்.

யுவன் காம்பினேஷனில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது?

செல்வராகவன் -  பர்ஸ்ட் சாங்... தேவதையை கண்டேன். அதுக்கும் முன்னாலன்னா, இது காதலா... இப்போதுவரை எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்னா, இதுவரை...(கோவா படத்தில் இடம்பெற்ற பாடல்).

புதுப்பேட்டையில் வரும் ஒரு நாளில்... பாடல் வீடியோ ஷுட் பண்ணுவீர்களா...?

செல்வராகவன் - யுவனுடன் சேர்ந்து அந்த வீடியோவை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நேரம் அமையும் போது அதனை எடுப்போம். அந்தப் பாடலை எங்கள் பெஸ்ட் ப்ரெண்ட் நா.முத்துகுமாருக்கு டெடிகேட் செய்வோம்.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எத்தனை பாடல்கள்? எப்போது பாடலை கேட்க முடியும்?

செல்வராகவன் - நான்கு பாடல்கள்.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?

செல்வராகவன் - நெஞ்சம் மறப்பதில்லை படம் பார்க்க வரும் போது, எதையும் மனதில் வைத்துக் கொண்டு வராதீர்கள். திறந்த மனதுடன் வந்தால், அந்தப் படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :