முதன்மை பக்கம் > விளையாட்டு > 20-20 > செ‌ய்‌திக‌ள் > 20- 20 அரையிறுதி: பாகிஸ்தான் முதலில் பேட்டிங்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
20- 20 அரையிறுதி: பாகிஸ்தான் முதலில் பேட்டிங்
நாட்டிங்காம் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ள ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவர் யூனிஸ் கான் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார்.

ஆட்டக்களம் நேரம் போகப் போக மெதுவான ஆட்டக்களமாக இருக்கும் போல் தெரிவதால் முதலில் பேட் செய்வதாக தெரிவித்தார் யூனிஸ் கான்.

தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் ஸ்மித்தும் தான் டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட் செய்யவே முடிவு செய்திருப்பேன் என்றார்.

பாகிஸ்தான் அணி: ஷாஸைப் ஹஸன், கம்ரன் அக்மல், அப்துல் ரசாக், ஷோயப் மாலிக், யூனிஸ் கான், மிஸ்பா-உல்-ஹக், அஃப்ரீடி, ஃபவாத் ஆலம், உமர் குல், அஜ்மல், மொகமது ஆமீர்.

தென் ஆப்பிரிக்க அணி: ஸ்மித், காலிஸ், கிப்ஸ், டீவிலியர்ஸ், டுமினி, பௌச்சர், ஆல்பி மோர்கெல், வான் டெர் மெர்வ், பார்னெல், ஜோஹன் போத்தா, டேல் ஸ்டெய்ன்.
மேலும்
அரையிறுதியில் இந்திய மகளிர் தோல்வி
நியூஸீலாந்து மகளிர் அணி 145/5 (20)
மகளிர் உ.கோப்பை கிரிக்கெட்: நியூஸீ.32/1 (6)
ரசிகர்களுக்கு சச்சின் அறிவுரை
இருபது-20 உலகக்கோப்பை அரையிறுதி: தென்ஆப்ரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்
தோனி தோனி மீது ரசிகர்கள் வெறுப்பை உமிழ்ந்தனர்.