செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் முர்ரே- சொங்கா மோதல் (Andy Murray, Songa to Clash in Wimbledon Semis)
விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 4-ம் நிலை வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து)- ஏழாம் நிலை வீரரான டேவிட் பெரர் (ஸ்பெயின்) மோதினார்கள்.

இதில் முர்ரே 6- 7 (5௭), 7- 6 (8௬), 6- 4 7- 6 (7௪) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் தொடர்ந்து 4-வது முறையாக விம்பிள்டன் அரை இறுதியில் நுழைந்துள்ளார். ஆனால் இதுவரை முர்ரே இறுதிப் போட்டிக்குள் நுழையவில்லை.

உள்ளூர் வீரரான முர்ரே அரை இறுதியில் 5-வது தரவரிசையில் இருக்கும் வில்பரைடு சோங்காவை (பிரான்ஸ்) எதிர்கொள்கிறார்.

சோங்கா கால்இறுதியில் 7- 6 (7- 5), 4- 6, 7- 6 (8- 3) 6- 2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு 27-ம் நிலை வீரரான பிலிப்பை (ஜெர்மனி) தோற்கடித்தார்.

சோங்கா தொடர்ந்து 2-வது முறையாக விம்பிள்டன் அரை இறுதிக்கு நுழைந்துள்ளார். இவரும் இதுவரை கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றது இல்லை. 2008-ம் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் தோற்றார்.
மேலும் படிக்க
Feedback Print