செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » வெளிப்படையாக செயல்படவில்லை பி.சி.சி.ஐ.- மாக்கான் பாய்ச்சல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளிப்படையாகச் செயல்படவில்லை அதனால்தான் விளையாட்டு மசோதாவை அது எதிர்த்து வருகிறது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கான் சாடியுள்ளார்.

"புதிய மசோதாவை ஏன் எதிர்க்கிறோம் என்பதை தெரிவித்து, பி.சி.சி.ஐ., 26 முதல் 27 பக்கங்கள் கொண்ட கடிதம் அனுப்பியது. இவர்கள் வெளிப்படையாக செயல்படுவதாக இருந்தால், ஏன் பயப்படுகின்றனர்" என்றார் அஜய் மாக்கன்.

புதிய சட்டத்தின் நோக்கமே வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது தான். இதற்கு தகவல் பெறும் உரிமை சட்டம் உதவி செய்கிறது. ஏற்கனவே பி.சி.சி.ஐ., மத்திய அரசிடம் இருந்து வரிவிலக்கு, போலீஸ் பாதுகாப்பு உட்பட பல சலுகைகளை பெறுகிறது. ஐ.பி.எல்., பொழுதுபோக்கு பிரிவில் உள்ளது" என்றார் அஜய் மாக்கான்.
மேலும் படிக்க
WebduniaWebdunia