ஆஸ்ட்ரேலியா கோல் மழை: இந்தியாவை ஊதித் தள்ளியது

வியாழன், 14 அக்டோபர் 2010 (13:29 IST)

டெல்லியில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி தினமான இன்று ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியாவை, உலக ஹாக்கி சாம்பியன் ஆஸ்ட்ரேலியா 8-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது முறையாக காமன்வெல்த் தங்கம் வென்றுள்ளது.

இந்தியாவுக்கு முதன் முறையாக காமன்வெல்த் ஹாக்கியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

துவக்கத்தில் இந்தியா ஆக்ரோஷம் காட்டினாலும், ஆஸ்ட்ரேலியா எதிர்தாக்குதல் தொடுப்பதற்கு நிறைய வாய்ப்புகளை வழங்கினர். மேலும் எதிர்த்தாக்குதலை சமாளிக்க இந்திய வீரர்களிடம் போதிய பயிற்சியின்மை வெளிப்படையாகத் தெரிந்தது.

கோல்கீப்பர் பாரத் சேட்ரி மட்டும் இன்று இல்லையெனில் இந்தியா மேலும் 7 கோல்களை வாங்கியிருக்கக்கூடும். அப்படித்தான் இருந்தது இந்திய ஆட்டம் இன்று.

முதல் 15 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்தியா கோலாக மாற்ற முடியவில்லை. ஆனால் அதற்கு அடுத்த 2 நிமிடங்களில் ஆஸ்ட்ரேலியா எதிர்த்தாக்குதல் நடத்தியது, ஆஸ்ட்ரேலிய வீரர் ஆக்கண்டேல் அடித்த சக்தி வாய்ந்த ஷாட் சந்தீப் சிங்கின் குச்சியில் பட்டு கோலாக மாறியது. இந்திய கோல் கீப்பர் பாரத் சேட்ரியால் தடுக்க முடியாத கோல்களில் இதுவும் ஒன்று.

மீண்டும் ஆஸ்ட்ரேலியா தாக்குதல் தொடுக்க இந்திய வீரர்கள் அவர்கள் பின்னால் ஓடினர். சிரெல்லோ அடித்த சக்தி வாய்ந்த ஷாட்டில் பாரத் சேட்ரியே ஆடிப்போனார் மீண்டும் கோல்.

இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆனால் அதனை துஷார் கோட்டை விட்டார். இம்முறையும் கோட்டை விட்ட கையோடு ஆஸ்ட்ரேலிய எதிர்த்தாக்குதலை முறியடிக்க முடியவில்லை வில்சன் கோல் அடித்தார் ஆஸி.4-0 என்று முன்னிலை வகித்தது. இத்துடன் இடைவேளை வந்தது.

இடைவேளைக்குப் பிறகு இந்தியாவுக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது அதனை அர்ஜுன் ஹாலப்பா ஒன்றுமில்லாத ஷாட்டால் கோட்டை விட்டார். மீண்டும் ஆஸ்ட்ரேலியா எதிர்த்தாக்குதல் நடத்தி கோலுக்கு அருகில் வந்து ஒரு அடி அடிக்கிறது இம்முறை கோல் கீப்பர் பாரத் சேட்ரி அபாரமாக தடுத்து விடுகிறார்.

ஆனால் அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா ஆக்ரோஷம் காட்ட, இந்தியா தனக்குக் கிடைத்த வாய்ப்புகளளயும் கோட்டை விட, மேலும் 4 கோல்களை இடைவேளைக்குப் பிறகு ஆஸ்ட்ரேலியா அடித்து 8-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை ஊதித் தள்ளி தங்கம் வென்றது.

இதில் வேதனையென்னவெனில் ஆட்டம் முடிய 10 வினாடிகளே உள்ள நிலையில் 8-வது கோலைத்திணித்தனர் ஆஸ்ட்ரேலியா.

அதாவது பாரத் சேட்ரி இல்லையெனில் கோல் போஸ்ட் என்பது ஆஸ்ட்ரேலியாவுக்குத் திறந்த வெளிதான். அப்படித்தான் இருந்தது இந்திய அணியின் பாதுகாப்பு வளையம்.

போட்டி முடிந்த பிறகு இரு அணிவீரர்களுக்கும் கை கொடுத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

விளையாட்டு

சானியா மிர்சா அரையிறுதியில் தோல்வி

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளி ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் ...

சின்சினாட்டி ஓபன் :அரையிறுதிக்கு சானியா முன்னேறினார்

அமெரிக்காவில் ஒஹாயோ மாகாணத்தில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் ...

சின்சினாட்டி ஓபன் அரையிறுதியில் சானியா இணை!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ...

சின்சினாட்டி காலிறுதியில் சானியா!

டிரினிடாடில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளின் ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

வா‌ஸ்து: கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் முறை

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌ள் ‌பி.சொ‌க்க‌லி‌ங்க‌ம்!

ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை...

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌‌ள் ‌பி. சொ‌க்க‌லி‌ங்க‌ம்

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine
Widgets Magazine