செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » ஏடிபி டென்னிஸ்: இரட்டையரில் பூபதி-நோலஸ் அபாரம்
Bookmark and Share Feedback Print
 
இங்கிலாந்தில் நடந்து வரும் ஆடவருக்கான ஏடிபி வேல்ர்டு டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் பூபதி-நோலஸ் இணை வெற்றி பெற்றுள்ளது.

ஏ-பிரிவில் இடம் பெற்றிருக்கும் இந்தியாவின் மகேஷ் பூபதி-மார்க் நோலஸ் (பகாமஸ்) இணை ஏற்கனவே தங்களது முதல் ஆட்டத்தில் செர்மாக்-மெர்டினாக் இணையை வீழ்த்தி இருந்தது.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில், போலந்தின் பைர்ஸ்டென்பர்க்-மார்சின் மேட்கவ்ஸ்கி இணையை 3-6, 6-3, 10-7 என்ற செட் கணக்கில் பூபதி-நோலஸ் இணை கடுமையாக போராடி வென்றது. இதன் மூலம் பூபதி இணையின் அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்