செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » நான் ஓரம் கட்டப்படவில்லை : கல்மாடி (I am not sidelined, I won't quit: Kalmadi)
Feedback Print Bookmark and Share
 
காமன்வெல்த் போட்டிக்கான அமைப்பு கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாடி ஓரம் கட்டப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதனை மறுத்துள்ளார்.

காமன்வெல்த் போட்டிகளின் கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் ஃபென்னல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக் கூப்பர் ஆகியோருடன்,போட்டி ஏற்பாடுகள் தொடர்பான பிரச்னைகளில் கல்மாடிக்கு மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் பகிரங்கமாக வெளிப்படையாக வெடித்த நிலையில்,காமன்வெல்த் போட்டிக்கான அமைப்பு கமிட்டியில் சில புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய நியமனங்கள்,கல்மாடியை ஓரம் கட்டுவதற்காக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில்,டெல்லியில் இது குறித்து கல்மாடியிடம் கேட்டபோது அதனை அவர் மறுத்தார்.

இந்திய அரசின் முழு ஆதரவும் தமக்கு இருப்பதாக கூறிய கல்மாடி,தாம் ஓரம்கட்டப்படவில்லை என்றும்,எனவே பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்