செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » இந்​திய ஹாக்கி அணி​யின் கேப்​ட​னாக ராஜ்​பால்​சிங் மீண்டும் நியமனம் ?
Feedback Print Bookmark and Share
 
இந்​திய ஹாக்கி அணி​யின் கேப்​ட​னாக ராஜ்​பால் சிங் நிய​மிக்​கப்​ப​டு​வார் என்று ஹாக்கி சம்​மே​ளன ​​வட்​டா​ரங்​களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

சில நாட்​க​ளுக்கு முன்பு இந்​திய ஹாக்கி அணி​யின் கேப்​டன் பத​வியி​லி​ருந்து ராஜ்​பால் சிங்கை நீக்​கப்பட்டு,அவருக்குப் பதிலாக சந்​தீப் சிங்கை கேப்​ட​னாக நியமிக்கப்பட்டார்.பயிற்​சி​யா​ளர் ஜோஸ் பிராசாவின் இந்த நடவடிக்கைக்கு அணி வீரர்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​த​னர்.

இ​தைத் தொடர்ந்து ஹாக்கி சம்​மே​ளன தலை​வர் ஏ.கே. மட்டூ,புனேவில் வீரர்​க​ளை​யும்,​ பிரா​சா​வை​யும் சந்​தித்து ஆலோ​ சனை நடத்​தி​னார்.ஆலோ​ச​னை​யின் முடி​வில் ராஜ்​பால் சிங்கை நீக்​கிய முடிவு செல்​லாது என்று மட்டூ அறி​வித்​தார்.

வி​ரை​வில் அணி​யின் கேப்​டன் யார் என்​பதை ஹாக்கி சம்​மே​ள​னம் முடிவு செய்​யும் என்​றும் அப்​போது மட்டூ அறி​வித்​தார்.

இந்​நி​லை​யில் அணி​யின் கேப்​ட​னாக ராஜ்​பால் சிங் மீண்​டும் நிய​மிக்​கப்​ப​டு​வார் என்று ஹாக்கி சம்​மே​ளன வட்​டா​ரங்​களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

வருகிற டிசம்​பர் 6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆர்​ஜென்​டி​னா​வின் சால்டா நக​ரில் சாம்​பி​யன்ஸ் சாலஞ்ச் ஹாக்​கிப் போட்​டி​கள் நடை​பெ​ற​வுள்​ளன.அப்​போட்​டிக்​கான இந்​திய அணி வீரர்​கள் விரை​வில் தேர்வு செய்​யப்​ப​டும்போபோது அணி​யின் கேப்​ட​னும் தேர்வு செய்​யப்​ப​ட​வுள்​ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இ​த​னி​டையே வெள்​ளிக்​கி​ழமை இரவு புணே​வில் பயிற்சி பெற்​று​வ​ரும் இந்​திய ஹாக்கி அணி வீரர்​க​ளுக்கு ஹாக்கி சம்​மே​ள​ னத்​தின் சார்​பில் விருந்து வழங்​கப்​பட்​டது. விருந்​தின்​போது கேப்​டன் பத​வியை மீண்​டும் ராஜ்​பால் சிங்​குக்கே வழங்க முடிவு செய்​யப்​பட்​ட​தா​கத் தெரி​ய​வந்​துள்​ளது.மேலும் இந்த முடிவு ஒரு​ம​ன​தாக எடுக்​கப்​பட்​ட​தா​க​வும் தெரி​ய​வந்​துள்​ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்