சர்வதேச ஸ்குவாஷ் விருது: தீபிகா பல்லிக்கல் பெயர் பரிந்துரை
புதுடெல்லி, சனி, 21 நவம்பர் 2009( 17:21 IST )
சர்வதேச ஸ்குவாஷ் விருதுக்கு இந்தியாவின் நட்சத்திர ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
FILE
ஐந்தாவது ஆண்டு சர்வதேச ஸ்குவாஷ் விருதுகள் வழங்கும் விழா லண்டனில் வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், நடப்பு ஆண்டுக்கான சிறந்த இளைய ஸ்குவாஷ் வீரர் விருதுக்கு இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எகிப்தைச் சேர்ந்த கன்சி டெஃப்ராவி, நௌர் எல் ஷெர்பினி, நூர் எல் தயீப், அமெரிக்காவின் அமன்டா சோபி, பாகிஸ்தானின் மரியா டூர் பகே ஆகியோரும் சிறந்த இளைய ஸ்குவாஷ் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா பல்லிக்கல், “சர்வதேச ஸ்குவாஷ் விருதுக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சிறந்த இளைய ஸ்குவாஷ் வீரர் விருதை வெல்வேன் என தாம் நம்புவதாக” கூறினார்.