ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: ஏ-பிரிவில் ஃபெடரர், டெல் போட்ரோ, முர்ரே
லண்டன், வெள்ளி, 20 நவம்பர் 2009( 15:32 IST )
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் விளையாடப் போகும் பிரபலங்களில், உலகின் முதல்நிலை வீரரான ரோஜர் ஃபெடரர், யு.எஸ். ஓபன் சாம்பியன் மார்டின் டெல் போட்ரோ, இங்கிலாந்து வீரர் ஏன்டி முர்ரே ஆகியோர் ஏ-பிரிவில் உள்ளனர்.
ரவுண்ட் ராபின் (round-robin) சுற்றில் ஃபெடரருடன் விளையாடுவதற்கு ஆவலாக உள்ளதாகத் தெரிவித்த முர்ரே, மார்டின் டெல் போட்ரோவுடன் தாம் ஏற்கனவே சில போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.
இதேபோல் இத்தொடரின் பி-பிரிவில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், நோவாக் ஜோகோவிச், டேவிடென்கோ, ராபின் சோடர்லிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.