செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » அமெரிக்க ஏ.டி.பி. டென்னிஸ்: அரையிறுதியில் சோம்தேவ் (Somdev Devvarman in semis)
Feedback Print Bookmark and Share
 
அமெரிக்காவின் சர்லோடஸ்விலியில் நடந்து வரும் ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் இளம் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் முன்னேறியுள்ளார்.

டென்மார்க் வீரர் மட்வி மிடெல்கூப்பை எதிர்த்து காலிறுதியில் விளையாடிய சோம்தேவ், 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்றார்.

மற்றொரு காலிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ரியான் ஸ்வீட்டிங், சக நாட்டு வீரர் மைக்கேல் ருசேலை 6-2, 3-6, 7-6(1) என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். அரையிறுதியில் இவர் சோம்தேவை எதிர்த்து களமிறங்குகிறார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்