ஆசிய உள்ளரங்கப் போட்டி: பங்கஜ் அத்வானிக்கு வெண்கலம்
ஹனோய் , சனி, 7 நவம்பர் 2009( 17:41 IST )
வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்த ஆசிய உள்ளரங்கப் போட்டியின் பில்லியர்ட்ஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
FILE
இங்லிஷ் பில்லியர்ட்ஸ் ஒற்றையர் பிரிவில் 3வது இடத்திற்கான போட்டியில் மியான்மர் வீரர் கியாவ்-ஓ உடன் அத்வானி மோதினார். இதில் 100-16, 100-58, 100-11 என்ற புள்ளிக்கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இத்தொடரில் முன்னதாக நடந்த அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்டிடம் 102-53, 0-102, 41-100, 32-102 என்ற புள்ளிக்கணக்கில் அத்வானி தோல்வியுற்றதால் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.