தினாரா சஃபீனா நேற்று மகளிர் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக பாதியில் விலகியதால் முதலிடத்தை இழந்தார். அவரது முதலிடத்தை மீண்டும் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பிடித்துள்ளார்.
தோஹாவில் நடைபெறும் டென்னிஸ் தொடரில் செர்பிய வீராங்கனை ஜெலெனா ஜான்கோவிச்சை எதிர்த்து விளையாடிய தினாரா சஃபீனா, முதுகு வலியால் கண்ணீர் மல்க மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஆனால் செரீனா வில்லியம்ஸ், தன் சகோதரி வீனஸ் வில்லியம்சை 5- 7, 6- 5, 7- 6 என்ற செட்களில் வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு செரீனாவிற்கு உறுதி பெற்றுள்ளது.