செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » ஊக்க மருந்து எடுத்துக் கொண்ட அகாசி; டென்னிஸ் உலகம் அதிர்ச்சி
Feedback Print Bookmark and Share
 
8 முறை கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டம் வென்ற அமெரிக்க டென்னிஸ் முன்னாள் நட்சத்திரம் ஆந்த்ரே அகாசி தான் கிறிஸ்டல் மெத் என்ற ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாகவும், தண்டனையிலிருந்து தப்பிக்க ஆடவர் டென்னிஸ் கூட்டமைப்பிடம் பொய் கூறியதாகவும் தெரிவித்ததையடுத்து டென்னிஸ் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

"ஓபன்" என்ற தன் சுய சரிதையில் பல்வேறு விஷயங்களை எழுதியுள்ள அகாசி இந்த ஊக்க மருந்து விவகாரத்தையும், அந்த ஊக்க மருந்து தன் வெற்றிக்கு எப்படி உதவியது என்பதையும் விலாவாரியாக எழுதப்போக அது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

1997ஆம் ஆண்டு ஸ்லிம் என்ற மருந்து நிபுணர் தனக்கு இதனை கொடுத்தார் என்று அகாசி தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். ஆர்ம்பெடமைன் என்ற போதைப் பொருளுடைய இந்த ஊக்க மருந்து அனைவரையும் எளிதில் வசியம் செய்து பழக்கத்திற்கு அடிமை படுத்தக் கூடியது.

ஆனால் அப்போது ஊக்க மருது சோதனையில் அகாசி இதனை எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. இதனை அவரிடம் தெரிவித்த போது, தெரியாமல் எடுத்து கொண்ட ஒரு சோடாவில் இது கலந்திருப்பது தனக்கு பின்னால்தான் தெரியவந்தது என்று ஏ.டி.பி.யிடம் பொய் கூறியதாகவும் அகாசி குறிப்பிட்டுள்ளார்.

1997ஆம் ஆண்டு மருத்துவர் அகாசியை தொலை பேசியில் அழைத்து ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக தெரிவித்ததையடுத்து, டென்னிஸ் வாழ்வு, நல்ல பெயர் எல்லாம் பறிபோய்விடும் என்ற பயத்தில் ஏ.டி.பி.க்கு பொய்களும் சில உண்மைகளும் அடங்கிய கடிதத்தை அனுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் 1999ஆம் ஆண்டுதான் துவங்கப்பட்டது. அகாசி மாட்டியதோ 1997ஆம் ஆண்டு. இதற்கு முன் தனித் தனி டென்னிஸ் நிர்வாக அமைப்புகளே இந்த ஊக்க மருந்து விவகாரத்தை கவனித்து வந்தன.

ஆனால் இவ்வளவு வெளிப்படையாக இந்த தகவலை வெளியிட்டதன் பின் விளைவுகள் பற்றி தான் இப்போதைக்கு கவலைப்படவில்லை என்று ஆந்த்ரே அகாசி தெரிவித்துள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்