தகுதிச் சுற்று பேட்மின்டன் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய பேட்மின்டன் வீரர் அனுப் ஸ்ரீதர், பிரான்சில் நடைபெறும் யோனெக்ஸ் பிரெஞ்ச் சூப்பர் தொடர் பேட்மின்டன் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார்.
எதிர்கொண்ட இரண்டு வீரர்களுமே பாதி ஆட்டத்தில் விலக அதிர்ஷ்டம் ஸ்ரீதர் பக்கம் அடித்தது.
செக். வீரர் டொமாஸ் கோப்ரீவா 1- 1 என்று இருந்த போது விலகினார். அடுத்ததாக ஸ்வீடன் வீரர் ஹென்றி ஹர்ஸ்கெய்னன் 19- 21, 11- 15 என்று பின் தங்கியிருந்தபோது விலகினார்.
மற்றொரு வீரர் அஜய் ஜெயராம் தகுதி பெறத் தவறியுள்ளார்.