தோஹாவில் நடைபெறும் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில், ரஷ்ய வீராங்கனை எலெனா டெமென்டீவா, அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை 6- 3, 6- 7, 6- 2 என்ற செட்களில் போராடி வீழ்த்தினார். இதனால் வீனஸ் வில்லியம்ஸ் வெளியேறினார். ஆனால் மற்றொரு ரஷ்ய வீராங்கனை ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை செரீனா வில்லியம்ஸ் வீழ்த்தினார்.
இரண்டாவது செட்டில் வீனஸ் வில்லியம்ஸ் 6- 5 என்று வெற்றிக்கான சர்வை அடிக்கலானார். ஆனால் டெமென்டீவா சில அதிரடி ஷாட்களை அடித்து வீனஸின் வெற்றி வாய்ப்பை முறியடித்தார்.
அடுத்த செட்டில் டெமென்டீவா வீனஸிற்கு வாய்ப்பேயளிக்காமல் முதலிலேயே 4- 0 என்ற செட்களில் அபார முன்னிலை பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்வெட்லான குஸ்னெட்சோவாவை 7- 6, 7- 5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் விக்டோரியா அஸரென்கா, செர்பிய நட்சத்திர வீராங்கனை ஜெலெனா ஜான்கோவிச்சை அதிர்ச்சித் தோல்விய்றச் செய்தார்.