மெல்பர்ன், செவ்வாய், 27 அக்டோபர் 2009( 15:18 IST )
ஆஸ்ட்ரேலியாவில் 2 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி 16 கால்பந்தாட்ட வீரர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆஸ்ட்ரேலியாவின் நார்தன் ஃபுட்பால் லீக் (Northern Football League) என்றழைக்கப்படும் கால்பந்து அணியைச் சேர்ந்த 17 முதல் 20 வயதிற்கு உட்பட்ட 16 வீரர்கள், மெல்பர்ன் அருகே உள்ள ஃபில்லிப் தீவுப் பகுதியில் 2 பெண்களுக்கு கடந்த 10ஆம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 2 பெண்களும் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், அந்த 16 வீரர்களையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்துள்ளதாக அந்நாட்டில் வெளியாகும் ‘தி ஏஜ்’ நாளிதழ் இன்று தெரிவித்துள்ளது.