சியோல் சேலஞ்சர் டென்னிஸ்: இரட்டையரில் சோம்தேவ் தோல்வி
திங்கள், 26 அக்டோபர் 2009( 18:21 IST )
சியோலில் நடந்து வரும் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் இளம் நட்சத்திர வீரர் சோம்தேவ்-டோட் விடோம் (அமெரிக்கா) இணை தோல்வியடைந்துள்ளது.
முதல் சுற்றுப்போட்டியில் இஸ்ரேலின் அமிர் ஹடாட்-ஹரெல் லெவி இணையுடன் மோதிய சோம்தேவ் இணை முதல் செட்டில் 1-6 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியுற்றது.
எனினும் 2வது செட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் சோம்தேவ் இணை விளையாடியதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் 6-7 (7) என்ற புள்ளிக்கணக்கில் சோம்தேவ் இணை தோல்வியுற்றது.