உலக டென்னிஸ் தரவரிசை: சோம்தேவ், பிரகாஷ் அபார முன்னேற்றம்
புதுடெல்லி, திங்கள், 26 அக்டோபர் 2009( 17:39 IST )
சர்வதேச டென்னிஸ் ஒற்றையர் தரவரிசைப் பட்டியலில் இந்திய இளம் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் 121வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதற்கு முன்னர் 124வது இடத்தில் இருந்த சோம்தேவ் தற்போது 121வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த இடத்திற்கு அவர் முன்னேற்றியுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மற்றொரு இளம் வீரர் யூகி பிம்ப்ரி 3 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 344வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் 17 இடங்கள் முன்னேறி 232வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இரட்டையர் பிரிவில் 6வது இடத்தில் இருந்த மகேஷ் பூபதி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். எனினும், லியாண்டர் பயஸ் தனது 8வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
மகளிருக்கான ஒற்றையர் தரவரிசையில் தொடந்து 58வது இடத்தில் உள்ள சானியா மிர்சா, இரட்டையர் பிரிவில் 38வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.