கிரெம்ளின் டென்னிஸ்: ஆடவர் சாம்பியன் மிகைல் யூஸ்னி
மாஸ்கோ, திங்கள், 26 அக்டோபர் 2009( 17:29 IST )
ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த கிரெம்ளின் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை அந்நாட்டு வீரர் மிகைல் யூஸ்னி கைப்பற்றியுள்ளார்.
இறுதிப்போட்டியில், செர்பியாவின் ஜான்கோ திப்சாரிவிக் உடன் மோதிய யூஸ்னி, 6-7 (5-7), 6-0, 6-4 என்ற நேர் செட்களில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
வெற்றிக்கு பின்னர் பேசிய யூஸ்னி, “இறுதி செட் ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற எனக்கு பலமுறை வாய்ப்புக் கிடைத்தது. சொந்த மண்ணில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பட்டம் வெல்வது மிகச் சிறந்த விடயம்” என்றார்.