செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » சாய்னாவிற்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது
Feedback Print Bookmark and Share
 
பெட்ரோலியம் விளையாட்டு வளர்ச்சி வாரியத்தின் 2008- 09 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பெற்றார். பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி, கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் ஆகியோருக்கு 2007- 08 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழா நேற்று புது டெல்லியில் நடைபெற்றது. ஆனால் விருது பெற்றோர் பலர் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு காரண்க்களினால் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பங்கஜ் அத்வானி, செஸ் வீரர் அபிஜித் குப்தா, பேட்மின்டன் வீரர்களான ஷ்ருதி குரியென், துருப்தி மர்கண்டி, டேபிள் டென்னிஸ் வீரர் சுபஜித் சாஹா, ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னாள் இந்திய டெபிள் டென்னிஸ் வீரர் மோனாலிசா மேத்தாவிற்கு 2007- 08 ஆம் ஆண்டிற்கான வாழ் நாள் சாதனை விருதும், 2008- 09ஆம் ஆண்டிற்கான வாழ் நாள் சாதனை விருது முன்னாள் ஹாக்கி கோல் கீப்பர் ரோமியோ ஜேம்சிற்கும் வழங்கப்பட்டது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்