இங்கிலாந்து, லீட்ஸில் நடைபெற்ற உலக தொழில் பூர்வ பில்லியர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் பங்கஜ் அத்வானிக்கு இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்தார். இவரது வெற்றி நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்று அவர் தன் வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளார்.