செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » பெட்ரோவா, குஸ்னெட்சோவா அதிர்ச்சித் தோல்வி (Petrova made a shock exit in US Open)
 
webdunia photo
FILE
யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டங்களில் ரஷ்ய வீராங்கனைகளான குஸ்னெட்சோவா, நாடியா பெட்ரோவா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினர். அமெரிக்காவின் ஊடின், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.

17-வயது நிரம்பிய அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கனையான் மெலானி ஊடின், தர நிலையில் இல்லாவிட்டாலும், 13ஆம் தரவரிசையில் உள்ள ரஷ்ய அபாய வீராங்கனை என்று வர்ணிக்கப்படும் நாடியா பெட்ரோவாவை 1- 6, 7- 6, 6- 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தன் முதல் கிராண்ட் ஸ்லாம் காலிறுதியை எட்டி அமெரிக்க ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

காலிறுதியில் 9ஆம் தர நிலையில் உள்ள டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியிஆக்கியை சந்திக்கிறார் மெலானி ஊடின்.

6ஆம் தர நிலையில் உள்ள குஸ்னெட்சோவா, வோஸ்னியாக்கியிடம் 6- 2, 6- 7, 6- 7 என்ற செட் கணக்கில் துரதிர்ஷ்டவசமாக தோல்வி தழுவினார்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த விக்மேயர், செக்.குடியரசைச் சேர்ந்த அதிகம் அறியப்படாத க்விடோவா என்பவரை 4- 6, 6- 4, 7- 5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதன் முறையாக கிராண்ட் ஸ்லாம் காலிறுதி கண்டுள்ளார்.

தர நிலையில் இல்லாத உக்ரெய்ன் வீராங்கனை கேதரீனா பொன்டாரென்கோ, தர நிலையில் இல்லாத அர்ஜென்டீனா வீராங்கனை கிசேலா டல்கோவை 6- 0, 6- 0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்