செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » ஃபெடரர், ஜோகோவிச் காலிறுதியில் (Federer, Jokovich storms into Quarter Finals)
 
webdunia photo
FILE
யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரிடம் தோல்வி கண்டு ஸ்பெயின் வீரர் ராப்ரீடோ வெளியேறினார். மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் 15ஆம் தரவரிசையில் உள்ள செக்.வீரர் ஸ்டெபானெக்கை ஜோகோவிச் வீட்டுக்கு அனுப்பினார்.

ஆட்டத்தின் எந்த நிலையிலும் சவாலை எதிர்கொள்ளாத ரோஜர் பெடரர், ராப்ரீடோவை 7- 5, 6- 2, 6- 2 என்ற செட்கணக்கில் வீழ்த்தி ராப்ரீடோவின் காலிறுதிக் கனவை முறியடித்தார்.

முதல் 3 போட்டிகளில் ஃபெடரர் 9 முறை டபுள் ஃபால்ட் செய்தார். ஆனால் நேற்று ஒரு டபுள் ஃபால்ட் கூட அவர் செய்யவில்லை.

ராப்ரீடோ தன் இரண்டாவது சர்வில் 30க்கு 12 முறைதான் வெற்றி பெற முடிந்தது. நெட்டிற்கு பக்கத்தில் வந்து ராபிரீடோவை திண்ற அடித்த ரோஜர் ஃபெடரர் 136 முறை நெட்டிற்கு அருகில் வந்து ஆடியதில் 97 முறை வெற்றி பெற்றார்.

காலிறுதியில் ஃபெடரர், தன் பிரேஞ்ச் ஓபன் வைரியான ராபின் சோடர்லிங்கை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் செர்பிய நட்சத்திஅரம் ஜோகோவிச், 6- 1, 6- 3, 6- 3 என்ற செட் கணக்கில் செக்.குடியரசு வீரர் ராடெக் ஸ்டெஃபானெக்கை எளிதில் முறியைடித்தார்.

காலிறுதிச் சுற்றில் ஜோகோவிச், ஸ்பெயின் இடது கை வீரர் ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோவை சந்திக்கிறார்.

வெர்டாஸ்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு ஜோகோவிச் முன்னேறினால், 2009ஆம் ஆண்டு ஜோகோவிச் நுழையும் முதல் கிராண்ட் ஸ்லாம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்