கலப்பு இரட்டையரில் பூபதி, பயஸ் இணைகள் காலிறுதியில்
செவ்வாய், 8 செப்டம்பர் 2009( 10:17 IST )
அமெரிக்க ஓபன்ட் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ்-காரா பிளாக் இணை இத்தால்யின் பென்னெட்டா, டுசான் வேமிச் இணையை 6- 4, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.மற்றொரு இந்திய-அமெரிக்க ஆண்/பெண் இரட்டையர் இணையான பூபதி-ஹியூபர் இணை அமெரிக்க இணையான கிரேபாஸ்-புடோராக் இணையை 6- 3ம், 6- 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.