முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > சோடர்லிங், சார்டி, 3-வது சுற்றில்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சோடர்லிங், சார்டி, 3-வது சுற்றில்
ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்கில் நடைபெறும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ஜெர்மனி வீரர் ஆண்ட்ரியாஸ் பெக் என்பவரை 7- 6, 7- 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் வீரர் ஜெரெமி சார்டி 3-வது சுற்றுக்குள் நுழைந்துள்ளார். ஸ்வீடன் வீரர் ராபின் சோடர்லிங் போராடி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

இந்த வெற்றி மூலம் தற்போது ஒற்றையர் ஆட்டங்களில் தொடர்ந்து 6 போட்டிகளை வென்றுள்ளார் ஜெரெமி சார்டி.

மற்றொரு ஆட்டத்தில் ஆடவர் டென்னிஸ் உலகத் தரவரிசையில் 12ஆம் இடத்தில் உள்ள நிகோலே டேவிடென்கோ ஜெர்மனி வீரர் பிலிப் பெட்ஷ்னர் என்பவரை முதல் செட்டில் ஒரு பிரேக் கொடுத்தும் இரண்டாவது செட்டில் இரண்டு பிரேக்குகள் கொடுத்தும் 6- 3, 6- 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு ரஷ்ய வீரர் ஐகோர் ஆந்த்ரீவ் 4- 6, 3- 6 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜூலியன் பென்னெட்டூவிடம் தோல்வி தழுவி வெளியேறினார்.

பிரெஞ்ச் ஓபனில் கலக்கிய ஸ்வீடன் வீரர் ராபின் சோடர்லிங், இத்தாலி வீரர் ஃபேபியோ ஃபோக்னீனி என்பவரை 6- 3, 6- 7, 5- 3 என்ற நேர் செட்களில் வீழ்த்த கடுமையாக போராடினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஸ்லாவேனியா ஓபன்; சஃபீனா காலிறுதியில்
வரிசெலுத்துவோர் பட்டியலிலும் சச்சின் முதலிடம்
இளையோர் ஆசியக்கோப்பை ஹாக்கி: சீனா-இந்தியா ஆட்டம் ‘டிரா’
துரோணா விருது எனது பொறுப்பை அதிகரித்துள்ளது: கோபிசந்த்
கல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து: சென்னையில் நாளை துவக்கம்
உலக கோப்பை பேட்மின்டன்: நேரடியாக 2வது சுற்றில் நுழைகிறார் சாய்னா