கல்லூரி அணிகளுக்கு இடையிலான மாநில கைப்பந்து போட்டிகள் சென்னையை நங்கநல்லூரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை தொடங்குகிறன.
லட்சுமி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், ஏர்செல் நிறுவனம் ஆதரவுடன் வரும் 26ஆம் தேதி வரை நடக்கும் இப்போட்டிகளில், ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி (திருச்செந்தூர்), பனிமலர் பொறியியல் கல்லூரி உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதேபோல் பெண்கள் பிரிவில் எத்திராஜ் கல்லூரி, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி உட்பட 6 அணிகளும் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |