முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > மாநில அளவிலான கபடிப் போட்டி சென்னையில் நாளை துவக்கம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மாநில அளவிலான கபடிப் போட்டி சென்னையில் நாளை துவக்கம்
மாநில அளவிலான கபடிப் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் சிவந்தி கிளப் மற்றும் நெல்லை நண்பர்கள் கிளப் சார்பில் மாநில அளவிலான பி.ஜான் நினைவு கபடி போட்டி நடத்தப்படுகிறது. ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நாளை முதல் 26ஆம் தேதி வரை நடக்கிறது.

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் ஐ.சி.எஃப், சன் பேப்பர் மில், தமிழ்நாடு காவல்துறை, சாய், அலத்தங்கரை (கன்னியாகுமரி), கே.எம்.கே.கபடி கிளப் (சென்னிமலை) ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.

பெண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை, சாய், கபடி ஸ்டார், அலத்தங்கரை (கன்னியாகுமரி) ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் அடிப்படையில் இந்த போட்டி நடைபெறுகிறது. ஆட்டங்கள் தினசரி மாலை 5.30 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும். பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தங்கம் வென்ற தீபிகாவுக்கு உற்சாக வரவேற்பு: ஜார்க்கண்ட் வில்வித்தை கூட்டமைப்பு முடிவு
ஸ்லோவேனியா ஓபன்: 2வது சுற்றில் சஃபீனா
கேல்ரத்னா விருது: மேரி கோம் பெயர் பரிந்துரை
உலக இளையோர் வில்வித்தை: தீபிகாவுக்கு தங்கப்பதக்கம்
ஸ்வீடன் ஓபன் டென்னிஸ்: சோடர்லிங் சாம்பியன்
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி சா‌‌ம்‌பிய‌ன்