சென்னையில் வரும் 28ஆம் தேதி உலக இளையோர் ஸ்குவாஷ் போட்டி துவங்குகிறது. இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளனம் இதனை நடத்துகிறது. நேரு பூங்காவில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்குவாஷ் அகடமியில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடக்கும் இந்த ஸ்குவாஷ் தொடரில் இந்தியா, எகிப்து உட்பட 27 நாடுகள் பங்கேற்கின்றன.
ஆண்கள் தனி நபர், பெண்கள் தனி நபர், பெண்கள் அணிகள் ஆகிய பிரிவுகளில் இந்தப்போட்டி நடக்கிறது. ஆண்கள் பிரிவில் எகிப்தை சேர்ந்த முகமது எல் சவுர்பகி, பெண்கள் பிரிவில் இந்தியாவை சேர்ந்த தீபிகா ஆகியோர் முதல் நிலை வீரர், வீராங்கனையாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக உலக ஸ்குவாஷ் சம்மேளனத் தலைவர் என்.ராமச்சந்திரன், இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளனத்தின் பொதுப் செயலாளர் ஸ்ரீவத்சன் சுப்பிரமணியம் ஆகியோர் தெரிவித்தனர். |