முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > தெற்காசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியா 6 தங்கம் வென்றது
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தெற்காசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியா 6 தங்கம் வென்றது
வங்கதேசத்தில் நடைபெறும் தெற்காசிய துப்பாக்கி சுடுதல் போட்டித் தொடரில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது. 4ஆம் நாளான இன்று 6 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இதன் மூலம் 20 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் வென்று இந்தியா பதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

2 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் வென்று பாகிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது.

வங்கதேச அணி 3-வது இடத்திலும் இலங்கை அணி 4-வது இடத்திலும் உள்ளது. மகளிர் பிரிவு 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் ஹர்வீன் ஸ்ரவோ 479.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இதே பிரிவில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து வெண்கலம் வென்றார். வெள்ளி பாகிஸ்தான் வீராங்கனைக்கு சென்றது.

அதே போல் ஏர் பிஸ்டல் பிரிவில் மகளிர் அணி 1131 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. ஆடவர் பிரிவு 25மீ போட்டியில் இந்திய வீரர் அஷோக் பண்டிட் தங்கமும், விஜய் குமார் வெள்ளியும் வென்றனர்.

அதே போல் ஆடவர் அணிவாரியான போட்டியில் இந்திய அணி 1677 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
உலக பேட்மின்டன் போட்டிகள் நேவால் தலைமை
குத்துச்சண்டை 2 பதக்கங்கள் உறுதி
அமெரிக்க ஓபன் பரிசுத்தொகை அதிகரிப்பு
சர்ச்சையில் மீண்டும் அக்தர்
சானியா மிர்சாவை மிரட்டிய இளைஞர் கைது
பிரான்ஸ் டென்னிஸ் வீரர் மரமமான முறையில் மரணம்