ரஷ்யாவில் நடைபெறும் மகோமெட்-சலாம் உமகனோவ் நினைவுக் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரரகளான் அமந்தீப் சிங், மன்ப்ரீத் சிங் ஆகியோர் அரையிறுதியில் நுழைந்துள்ளதையடுத்து இந்தியாவிற்கு 2 பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.
48 கிலோ எடைப்பிரிவில் அமந்தீப் ரஷ்ய வீரர் கின்னாச்மயேவ் என்பவரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதே போல் 91 கிலோ எடைப்பிரிவில் மன்ப்ரீத் சிங் ரஷ்ய வீரர் ரஸ்டாம் என்பவரை வீழ்ட்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளிலும் இந்திய வீரர்களுக்கு ஓரளவு வெற்றி தினமாக அமைந்தது. தேசிய சாம்பியன் ஜஸ்வீர் சிங் அஜர்பெய்ஜான் வீரரை 8- 2 என்று தன் முதல்சுற்றில் வெற்றி பெற்றார். |