4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆகஸ்டு 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான பரிசுத்தொகை தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த முறையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி போட்டித்தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.1031- 32 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட சுமார் ரூ.5 கோடி அதிகமாகும். ஆண்கள் மற்றும் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.71- 72 கோடி வழங்கப்படும். இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் கூடுதலாகும்.
மேலும் போட்டித் தொடர் முடிவில் தேர்வு செய்யப்படும் டாப்- 3 வீரர், வீராங்கனைகள் கூடுதல் தொகையாக ரூ.121- 122 கோடி வரை கூடுதலாக பெறுவார்கள்.
|