உலகின் வேகமான ஓட்டக்காரார் என்று வர்ணிக்கப்படும் 100மீ சாதனை நாயகனான ஜமைக்காவின் உசைன் போல்ட் லாசேனில் நடைபெற்ற கிராண்ட் பிரீ போட்டியில் 200மீ. தூரத்தை 19.59 வினாடிகளில் கடந்தார். தடகளவரலாற்றில் 4-வது அதிவேக நேரம் என்ற சாதனையை இதன் மூலம் புரிந்துள்ளார் உசைன் போல்ட்.
அவர் ஓடும் போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வீரரும் 400மீ ஒலிம்பிக் சாம்பியனுமான லஷ்வான் மெர்ரிட் இவருக்கு அடுத்த படியாக நெருக்கமான நேரத்தில் இலக்கை எட்டினார்.
200மீ. உலக சாதனையான 19.30 வினாடிகள் என்பதை மழை பெய்திருக்காவிட்டால் முறியடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று கூறினார் உசைன் போல்ட். |