முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > விம்பிள்டன்: கலப்பு இரட்டையர் இறுதியில் பயஸ் இணை தோல்வி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விம்பிள்டன்: கலப்பு இரட்டையர் இறுதியில் பயஸ் இணை தோல்வி
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில், லியாண்டர் பயஸ்-காரா பிளாக் இணை தோல்வியைத் தழுவியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கடைசி ஆட்டமாக கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-காரா பிளாக் (ஜிம்பாப்வே) இணை, மார்க் நோலஸ் (பஹமாஸ்)-அன்னா லீனா கோயென்பெல்ட்(ஜெர்மனி) இணையை எதிர்த்து விளையாடியது.

முதல் செட்டில் லியாண்டர் பயஸ் இணை 5-2 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணி பெற்றது. ஆனால் இந்த முன்னணியை அவர்களால் நீட்டிக்க முடியவில்லை. லியாண்டர் ஜோடி ஆட்டத்தில் செய்த தவறுகளை தங்களுக்கு சாதகமாக மார்க் நோலஸ்-அன்னா லீனா இணை பயன்படுத்திக் கொண்டு சரிவில் இருந்து மீண்டதுடன், முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய மார்க் நோலஸ் ஜோடி அந்த செட்டையும் வென்றது. மொத்தம் 88 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் மார்க் நோலஸ்-அன்னா லீனா ஜோடி 7-5, 6-3 என்ற நேர்செட்டில் லியாண்டர் பயஸ்-காரா பிளாக் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

மார்க் நோலஸ்சுக்கு இணைக்கு இது முதல் விம்பிள்டன் பட்டமாகும். இந்த தோல்வியால் 5வது கலப்பு இரட்டையர் மற்றும் 10வது கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற லியாண்டர் பயஸ்சின் கனவு கலைந்து போனது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
முதலிடம் பிடித்தார் ரோஜர் ஃபெடரர்
தரவரிசையில் சானியா பின்னடைவு
இந்திய குத்துச்சண்டை அணி ரஷ்யா புறப்பட்டது
15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ரோஜர் ஃபெடரர் உலக சாதனை
விம்பிள்டன் இறுதிப் போட்டி : பெடரர்-ரோடிக் மோதல்
வில்லியம்ஸ் சகோதரிகள் சாம்பியன்