முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > முதலிடம் பிடித்தார் ரோஜர் ஃபெடரர்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முதலிடம் பிடித்தார் ரோஜர் ஃபெடரர்
லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மராத்தான் இறுதிப் போட்டியில் 5 செட்களில் அமெரிக்க வீரர் ரோடிக்கை வீழ்த்தி தனது 15-வது உலக சாதனை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் உலகத் தரவரிசையில் தான் இழந்த முதலிடத்தை மீண்டும் பிடித்தார்.

காயம் காரணமாக இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்காத ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால் 2-வது இடத்திற்கு பின்னடைந்தார்.

கடந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஃபேல் நடால், ஃபெடரரை வீழ்த்தி ஃபெடரரின் 237 வார தொடர் முதலிட நிலையை தகர்த்து அவரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.

தற்போது ஓராண்டு இடைவெளியில் இழந்த முதலிடத்தை மீண்டும் பெற்றார் ரோஜர் ஃபெடரர்.

தரவரிசைகளில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற வீரர்களின் நிலை மாறவில்லை, ரோடிக் 6ஆம் இடத்தில் தொடர்ந்து நீடித்துள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தரவரிசையில் சானியா பின்னடைவு
இந்திய குத்துச்சண்டை அணி ரஷ்யா புறப்பட்டது
15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ரோஜர் ஃபெடரர் உலக சாதனை
விம்பிள்டன் இறுதிப் போட்டி : பெடரர்-ரோடிக் மோதல்
வில்லியம்ஸ் சகோதரிகள் சாம்பியன்
ஒற்றையர் போட்டியில் கவனம் செலுத்துங்கள் - கில்