விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் இரண்டாவது சுற்றில் தோற்று வெளியேறியதால் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உலகத் தரவரிசையில் 7 இடங்கள் பின்னடைந்து 85-வது இடத்திற்கு சரிந்தார். இரட்டையர் பிரிவு தரவரிசையில் 37-வது இடத்தில் உள்ளார்.
இளம் வீரர் சோம்தேவ் தேவ் வர்மன், பிரகாஷ் அமிர்தராஜ் ஆகியோரும் தங்கள் இடங்களில் பின்னடைவு கண்டு முறையே 132 மற்றும் 159-வது இடத்தில் உள்ளனர்.
ஆடவர் இரட்டையர் உலகத் தரவரிசையில் நோல்ஸுடன் விளையாடி வரும் மகேஷ் பூபதி ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தில் உள்ளார். முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்த லியாண்டர் பயஸ் மாறாமல் 6-வது இடத்தில் உள்ளார். |