முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ரோஜர் ஃபெடரர் உலக சாதனை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ரோஜர் ஃபெடரர் உலக சாதனை
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்திற்கான மராத்தான் டென்னிஸ் ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர், அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக்கை 5- 7, 7- 6 (8- 6), 7- 6, (7- 5), 3- 6, 16- 14 என்ற செட்களில் போராடி வீழ்த்தி 15-வது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை எடுத்து சாம்ப்ராஸ் முன்னிலையில் உலக சாந்தனை புரிந்தார்.

பீட் சாம்ப்ராஸ் இதற்கு முன்னர் அதிக பட்சமாக 14 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று உலக சாதனையை வைத்திருந்தார். நேற்று இந்த ஆட்டத்தைக் காண வந்த சாம்ப்ராஸ் தனது சாதனையை ஃபெடரர் முறியடிப்பதை நேரில் கண்டு ரசித்தார்.

சர்வ்களுக்கு புகழ் பெற்ற ரோடிக் 27 ஏஸ்களை மட்டும் அடிக்க ஃபெடரர் 50 ஏஸ்களை நேற்று விளாசினார். இந்த இறுதி ஆட்டத்தில் மொத்தம் 77 சர்வ் கேம்கள் நடைபெற்றது. விம்பிள்டன் இறுதியில் இவ்வளவு சர்வ் கேம்கள் வரை சென்றது இதுவே முதல் முறை.

முதல் செட்டின் 11-வது சர்வ் கேமில் 4 பிரேக் பாயிண்ட்களை காப்பாற்றிய ரோடிக், அதன் பிறகு அபாரமான கிராஸ் கோர்ட் ஷாட் மூலம் ஃபெடரரை அதிர்ச்சியடையச் செய்து பெடரர் சர்வை வீழ்த்தி முதல் செட்டை 7- 5 என்று கைப்பற்றினார்.

அதன் பிறகு இரண்டாவது செட்டும் 3-வது செட்டும் சர்வ் கேம்களில் பிரேக் நடந்தாலும் நடக்கலாம், நடக்காவிட்டாலும் இல்லை என்பது போல் சென்றது. இருவரும் அதிக ஏஸ்களை அடித்ததால் இரண்டு செட்களுமே டை - பிரேக்கருகு சென்றது.

இதில் ரோடிக் செய்த இரண்டு தவறுகளினால் இரண்டு செட்களையும் பெடரர் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் கைப்பற்றினார்.

பிறகு 4-வது செட்டில் தளராது மீண்டு எழுந்தார் ரோடிக் அந்த செட்டில் 2 பிரேக் பாயிண்ட்களை வெற்றி பெற்று ஃபெடரரை 6- 3 என்று வீழ்த்தினார்.

5-வது செட் இறுதி செட் என்பதனால் டை-பிரேக் கிடையாது. ஆட்டம் சர்வ் கேம்களாக ஒருவர் வெற்றி பெறும் வரை தொடர வேண்டும். இதுதான் நேற்றைய இறுதி போட்டியின் ஆகச் சிறந்த டென்னிஸ் ஆட்டமாக விளங்கியது என்றால் அது மிகையாகாது.

இதிலும் பெடரர் ஒரு பிரேக் கொடுக்கும் நிலைக்கு வந்தார் ஆனால் 6-வது முறையாக பிரேக் கொடுக்க முடியாதவாறு ரோடிக் ஏஸ் போட்டு தடுத்தார்.

ஆட்டம் மாறி மாறி இருவரும் தங்களது சர்வ்களை வெற்றி பெறுவதாக தொடர்ந்தது. ஆனால் பெடரருக்கு சற்றே நிச்சயமின்மை ஏற்பட்டது இதனால் 8- 8 என்று இருந்த நிலையில் இரண்டு பிரேக் பாயிண்ட்களை எதிர் கோன்டு தன் சர்வ்களால் மீண்டார்.

அதன் பிறகு விம்பிள்டன் வரலாற்றில் இது வரை கண்டிராத அளவிற்கு 5-வது செட் சென்றது. ஆனால் இந்த இறுதி செட்டின் 30-வது சர்வ் கேமில் ரோடிக் ஷாட்கள் எதுவும் சரியாக அமையாமல் போனது. முதன் முதலாக ரோடிக்கிடம் களைப்பின் குறிகள் தெர்னிந்தன. தொடர்ந்து ஒரு ஷாட்டை வெளியில் அடிக்க ஃபெடரரின் கனவு நனவானது. 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று உலக சாதனை புரிந்தார்.

கடும் ஏமாற்றமடைந்த ரோடிக், ஃபெடரரை வாழ்த்துவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
விம்பிள்டன் இறுதிப் போட்டி : பெடரர்-ரோடிக் மோதல்
வில்லியம்ஸ் சகோதரிகள் சாம்பியன்
ஒற்றையர் போட்டியில் கவனம் செலுத்துங்கள் - கில்
நெஸ்டர்-சிமோன்ஜிக் இரட்டையர் சாம்பியன்
விம்பிள்டன்: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்!
ஹரியானா டி.எஸ்.பி.-யாக சந்தீப் சிங் நியமனம்