விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியில் மோதிய வில்லியம்ஸ் சகோதரிகள், சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு மத்திய விளையாட்டு அரங்கிற்கு வந்தனர். அங்கு அவர்கள் இணைந்து மகளிர் இரட்டையர் போட்டியில் பங்கேற்றனர்.
அவர்களது முகத்தில் சிறிது களைப்பு தெரிந்தாலும், அவர்களது விளையாட்டில் அந்த களைப்பைக் காண முடியவில்லை.
வில்லியம்ஸ் சகோதரிகள், மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவின் சமந்தா ஸ்டோசர் - ரென்னே ஸ்டப்ஸ் இணையை எதிர்கொண்டனர்.
சகோதரிகள் இருவருமே முழுத் திறனையும் வெளிப்படுத்தி விளையாடி 7-6, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸி இணையை தோற்கடித்தனர்.
|